Tuesday 21st of May 2024 11:16:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஊரடங்கு தளரும் நாட்கள் அறிவிப்பு!

ஊரடங்கு தளரும் நாட்கள் அறிவிப்பு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இரு நாட்கள் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதா வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றி தமது கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE